கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை , காஞ்சிபுரம் ,மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.