கனமழை எதிரொலி: 3 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை....!

கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-12 01:41 GMT

சென்னை,

வட உள் தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்ய்ம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலை முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மழை பெய்து வருவதால் காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்