தமிழக-புதுச்சேரி கடலோர பகுதிகளில் வரும் 23 மற்றும் 24ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழக-புதுச்சேரி கடலோர பகுதிகளில் வரும் 23 மற்றும் 24ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-12-20 05:54 GMT

சென்னை,

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் 22ந் தேதி வரை மிதமான மழைக்கும், 23ந்தேதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் வரும் 23 மற்றும் 24ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது,

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வரும் 23 மற்றும் 24ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், மீனவர்கள் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடாவிற்கு வரும் 22ம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்