வேதாரண்யத்தில் பலத்த மழை
வேதாரண்யத்தில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
வேதாரண்யம்:
வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தோப்புத்துறை, குரவப்புலம், கோடியக்காடு, கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்த மழை சம்பா சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.