திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்தினாலும், அவ்வப்போது லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
அதேபோல் நேற்று மாவட்டத்தின் அனேக பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது.
அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 39 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- தண்டராம்பட்டு- 28.6, திருவண்ணாமலை- 25.5, சேத்துப்பட்டு- 14.4, போளூர்- 13.8, ஆரணி- 11.6, கீழ்பென்னாத்தூர்- 6.8, வந்தவாசி- 6, செங்கம்- 2.6, செய்யாறு- 1.2..
இந்த நிலையில் திருவண்ணாமலையில் இன்று மாலை சுமார் 4 மணியளவில் வெயிலுடன் கூடிய பலத்த மழை 1 மணி நேரத்திற்கு மேல் பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் பள்ளி விட்டு வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் கையில் குடைபிடித்த படியும், சிலர் மழையில் நனைந்த படியும் சென்றனர்.
அதை தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இதனால் இரவில் குளிா்ந்த காற்று வீசியது.