திருப்பத்தூரில் இன்று காலை முதல் மாலை வரை பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்தது.
இதையடுத்து இரவு 8 மணி அளவில் வானில் கருமேகங்கள் ஒன்று கூடி இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் விநாயகர் சதுர்த்திக்கு கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.