திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை...!
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு திடீரென கனமழை பெய்தது.
திருத்தணி,
வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று இரவு திருத்தணி பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய கன மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.
திருத்தணி சுற்றியுள்ள வேலஞ்சேரி, நல்லாட்டூர், கனகம்மாசத்திரம், மத்தூர், காசிநாதபுரம், கே.ஜி.கண்டிகை, திருவாரங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் பல இடங்களில் ஊர்ந்து சென்றது. இடியுடன் கன மழை பெய்த காரணத்தால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானர்கள்.