சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை..!
தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வண்டலூர் பகுதிகளில் கனமழை பெய்தது
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று இரவு கனமழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வண்டலூர் பகுதிகளில் கனமழை பெய்தது