சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை..!

சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.;

Update:2023-09-02 18:39 IST

சென்னை,

வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் சென்னையில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னையில் வேளச்சேரி, பள்ளிகரனை, தாம்பரம், குரோம் பேட்டை, வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில் கனமழை பெய்துள்ளது. திடீரென பெய்த கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்