நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.;
கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, அத்திப்பாளையம், குப்பம், குந்தாணி பாளையம், நத்தமேடு, வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், உப்புப்பாளையம், புன்னம் சத்திரம், மூலிமங்கலம், பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தவுட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சுமார் 1 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. இரவு முழுவதும் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.