சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள சுனைப்பாறை பகுதி, தலையணை, கோம்பையாற்று பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரமான விஸ்வநாதபேரி, ராயகிரி, உள்ளார், தளவாய்புரம், சொக்கநாதன் புத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சுமார் 2 மணி நேரத்திற்கு நீடித்த இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.