எஸ்.புதூர்,
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, குன்னத்தூர், தர்மபட்டி, கே.புதுப்பட்டி, கிழவயல், கரிசல்பட்டி, நாகமங்கலம், மேலவண்ணாரிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.. இந்த நிலையில் எஸ்.புதூர் பகுதியில் இரவு திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பலத்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.