சாத்தான்குளத்தில் பலத்த மழை: நூலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது
சாத்தான்குளத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் நூலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாத்தான்குளம் பழைய பஸ்நிலையம் அருகில் அரசு கிளை நூலகத்தின் உள்ளே மழை நீர் புகுந்து தேங்கியது. இதனால் நூலக வாசகர்கள் சிரமப்பட்டனர்.
இதேபோல் தட்டார்மடம், பன்னம்பாறை, பேய்க்குளம் பகுதியிலும் மழை பெய்தது. இதனால் அப்பகுதி குளிர்ச்சி அடைந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.