ராஜபாளையம்,
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் வெயில் சுட்ெடரித்து வருகிறது. மாலையில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை பெய்த மழையினால் ராஜபாளையம் நகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் நகர் பகுதியில் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தன. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதேபோல சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், தளவாய்புரம், புனல்வேலி, புத்தூர், நல்லமங்கலம், முகவூர், சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர் ஆகிய இடங்களில் பெய்தது. தொடர்மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.