மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு, பூம்புகார் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று காரணமாக சம்பாகட்டளை பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் மணி கிராமம், பூம்புகார் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் பூம்புகார் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பிகளை சீரமைத்து மின்வினியோகம் செய்தனர்.