பொன்னமராவதியில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பொன்னமராவதி, தொட்டியம்பட்டி, ஏனாதி மேலைச்சிவபுரி, ஆலவயல், அம்மன்குறிச்சி, வேகுப்பட்டி, கொன்னைப்பட்டி, தூத்தூர், கொன்னைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலத்தானியம் சுற்றுவட்டார பகுதியான முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஒளியமங்கலம், சடையம்பட்டி, எம்.உசிலம்பட்டி, மறவாமதுரை, சூரப்பட்டி, அம்மாபட்டி, ஆலம்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழைபெய்தது.