பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அவதியடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. இதைத்தொடர்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.