பெரியகுளத்தில் பலத்த மழை

பெரியகுளத்தில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-10-11 18:45 GMT

பெரியகுளத்தில் நேற்று காலை வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு இருந்தன. இதையடுத்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் அந்த மழை நீடித்தது. மதியம் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இந்நிலையில் மாலை 3 மணி அளவில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சாரலாக பெய்ய தொடங்கிய மழை திடீரென பலத்த மழையாக மாறியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக பெரியகுளத்தில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்