பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகலில் கடுமையான வெயிலும், மாலையில் சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று காலை முதலே கடும் வெயில் நிலவி வந்தது. மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான சூழல் நிலவியது.
சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் பழனி நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஒருசில இடங்களில் சாக்கடை கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறி மழைநீருடன் கலந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
பழனி பகுதியில் பெய்து வரும் இந்த மழையால் கோடை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.