கரூர் மாவட்டம், உப்புபாளையம், நத்தமேடு, நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், முத்தனூர், தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், பசுபதிபாளையம், புன்னம் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் தார் சாலைகளின் இருபுறமும் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி நிற்பதாலும், நடையனூர் அருகே சொட்டையூர் பகுதியில் நெடுகிலும் மழைநீர் நீரோடை போல் தார் சாலையில் செல்வதால் பெரிய வாகனங்கள் செல்லும்போது மழைநீர் பட்டு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது மழை நீர் தெளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் ஓட்டிகளின் உடைகள் நனைந்து அவதிப்பட்டு சென்றனர்.
இேதபோல கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- கரூர்-18, அரவக்குறிச்சி-28, அணைப்பாளையம்-27, க.பரமத்தி-9, குளித்தலை-6, தோகைமலை-4, கிருஷ்ணராயபுரம்-8, மாயனூர்-6, பஞ்சப்பட்டி-6, கடவூர்-15, பாலவிடுதி-11.4, மைலம்பட்டி-15. மொத்தம்-153.40.