ெநாய்யல், தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், காகித ஆலை, புன்னம் சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், திருக்காடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், கூலி தொழிலாளர்கள், சாலையோர கடைக்காரர்கள் அவதி அடைந்தனர். இந்தமழையால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் கிராமப்புறங்களில் வாடிய பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.