நாகர்கோவிலில் சாரல் மழை
நாகர்கோவிலில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாரல் மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. அதேசமயம் மலையோரம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் வானம் இருண்டது. அதைத்தொடர்ந்து சாரல் மழை பெய்தது. மாலையிலும் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் இரவில் மீண்டும் மழை பெய்தது.
மக்கள் மகிழ்ச்சி
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் நடந்து சென்றவர்கள் குடைகளை பிடித்தபடி சென்றனர். அதே சமயம் சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சென்றதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளானார்கள்.
நாகர்கோவிலில் பெய்த மழையால் இரவில் ஊட்டி, கொடைக்கானல் போல சீதோஷ்ண நிலை மாறி குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.