கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி பகுதிகளில் கனமழை
கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி பகுதிகளில் கனமழை பெய்தது.
கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தரகம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையி்ல் நேற்று இரவு 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.