கோவில்பட்டியில் பலத்த மழை

கோவில்பட்டியில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-09-03 13:46 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் வழக்கம்போல் நேற்று காலை முதலே வெயில் கொளுத்தியது. பின்னர் மாலை 4 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 45 நிமிடம் பெய்த இந்த மழையால் சாலை, ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியானதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில்பட்டியில் 20 மில்லிமீட்டர் மழையும், கழுகுமலையில் 25 மில்லிமீட்டர் மழையும் பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்