கோவில்பட்டியில் பலத்த மழை

கோவில்பட்டியில் பலத்த மழை பெய்தது.;

Update: 2023-08-29 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி பகுதியில் கடந்த ஒருமாதமாக கடும் வெயில் வாட்டிவந்தது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் முதல் கோவில்பட்டி பகுதியில் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 3.40 மணியளவில் திடீரென்று இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் 45 நிமிடம் பெய்த மழையை தொடர்ந்து சாரல் மழை நீடித்தது. இதனால் ரோடுகள், தெருக்களில் கழிவு நீருடன், மழைநீரும் கலந்து ஓடியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையால் வெப்பக்காற்று வீசிவந்த இப்பகுதியில் இதமான சூழல் உருவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்