கயத்தாறு பகுதியில் பலத்த மழை
கயத்தாறு பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
கயத்தாறு:
கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ராஜாபுதுக்குடி, அரசன்குளம், சாலை புதூர், பன்னீர் குளம், தலையால் நடந்தான்குளம் ஆகிய கிராமங்களில் நேற்று மதியம் முதல் மேகமூட்டம் சூழ்ந்தது. மாலை 3½ மணிக்கு திடீரென பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. மாலை 5.40 மணிவரை விடாமல் மழை கொட்டியது. இதனால் கயத்தாறு பஜாரில் உள்ள அனைத்து ரதவீதிகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது. குளங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் கடந்த ஒரு வராமாக சுட்டெரித்து வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.