காரையூர் பகுதியில் கனமழை

காரையூர் பகுதியில் கனமழை பெய்தது.

Update: 2022-06-16 18:44 GMT

காரையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று, நேற்று முன்தினம் தொடர்ந்து 2 நாட்களாக மேலத்தானியம், கீழத்தானியம், ஒலியமங்கலம், சடையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை, காரையூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் திடீரென காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் குளிர்ந்த காற்று நிலவியது. மேலும் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்