கடையநல்லூர் பகுதியில் பலத்த மழை
கடையநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.;
கடையநல்லூர்:
கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அச்சன்புதூர், இடைகால், நயினாரகரம், கொடிக்குறிச்சி, வடகரை, போகநல்லூர், வலசை, கம்பனேரி, மங்களாபுரம் காசிதர்மம், மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணி அளவில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழையாக பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.