கோவையில் பலத்த மழை ; மின்னல் தாக்கியதில் தீ பிடித்து எரிந்த தென்னை மரம் !
கோவையில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.
கோவையில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.
பலத்த மழை
கோவையில் நேற்று காலை கடும் வெயில் நிலவியது. ஆனால் மதியம் 2.30 மணி அளவில் வானம் கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக உருவெ டுத்து கொட்டி தீர்த்தது. இதனால் காந்திபுரம், வடகோவை, பூமார்க்கெட், ரேஸ்கோர்ஸ், கோவை- அவினாசி ரோடு, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
திடீரென மழை பெய்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். சுமார் 30 நிமிடங்கள் பெய்த இந்த மழையால் கோவை லங்கா கார்னர் ரெயில்வே பாலம், கோவை- அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் மழைநீர் குளம் போல் தேங்கியது.
மரத்தில் மின்னல் தாக்கியது
இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வது பாதிக்கப்பட் டது. லங்கா கார்னர் ரெயில்வே பாலத்திற்கு கீழ் தேங்கிய மழை நீர் மாநகராட்சி வாகனங்கள் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தப்பட ்டது.
கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் அவதிப்பட்ட னர்.
இடி, மின்னலுடன் மழை பெய்த போது ரத்தினபுரி சாஸ்திரி ரோடு ஐசக் வீதியில் டேனியல் என்பவருக்கு சொந்தமான வீட்டில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது.
இதனால் அந்த தென்னை மரம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
மரம் தீப்பற்றி எரிந்ததை அறிந்த அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், நரசீபுரம், ஆலந்துறை உள்ளிட்ட இடங்களில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நேற்று பெய்த காரண மாக விவசாயிகள் தொடர்ந்து விவசாய பணிகளில் ஈடுபட ஆர்வம் காட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது.
காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் மாலை நேரத்தில் மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.