சிதம்பரத்தில் பலத்த மழை
சிதம்பரத்தில் பலத்த மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி;
சிதம்பரம்
சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழை பெய்தால்தான் வெப்பம் தணியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் 1.10 மணியளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டித் தீர்த்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.
மேலும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. இந்த மழையால், பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.