சேரன்மாதேவி, வீரவநல்லூர் பகுதிகளில் பலத்த மழை

சேரன்மாதேவி, வீரவநல்லூர் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

Update: 2023-04-01 19:55 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி, வீரவநல்லூர் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் சேரன்மாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து காற்றுடன் கூடிய லேசான மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடந்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இதேபோல் வீரவநல்லூர், பத்தமடை, கூனியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மேலும் நெல்லை அருகே உள்ள கொண்டாநகரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாழைகள் சேதம்

பேட்டை அருகே உள்ள கருங்காடு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது, வீசிய சூறைக்காற்றில் அந்த பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன.

Tags:    

மேலும் செய்திகள்