சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை...!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாது கடந்த 3 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

Update: 2022-12-09 15:04 GMT

சென்னை,

சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது மாண்டஸ் புயல். மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாமல்லபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்