சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை

தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகின்றது.

Update: 2023-11-21 04:53 GMT

சென்னை,

தமிழக கடற்கரைப் பகுதியிலும், அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் குமரிக்கடல் பகுதியிலும் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகின்றது.

இந்தநிலையில், சென்னையில் ஆங்காங்கே கனமழை விட்டு விட்டு பெய்து வருகின்றது. பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், புழல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகின்றது. பட்டாளம் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் மீண்டும் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மின்மோட்டார் உதவியுடன் வெள்ள நீரை வடிய வைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்