பெங்களூருவில் கனமழை: சென்னை விமானம் 3 மணி நேரம் தாமதமாக திருச்சி வந்தடைந்தது

பெங்களூருவில் கனமழை பெய்ததால் சென்னை விமானம் 3 மணி நேரம் தாமதமாக திருச்சி வந்தடைந்தது.

Update: 2023-07-12 18:48 GMT

திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்து பின்னர் அங்கிருந்து திருச்சிக்கு வரும் விமானம் பெங்களூருவில் கனமழை காரணமாக சுமார் 3 மணி நேரம் தாமதமாக சென்னை வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி வர வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 10.55 மணிக்கு திருச்சி வந்தடைந்தது. மேலும் இதே நேரத்தில் காலை 10.11 மணிக்கு சென்னையில் இருந்து வழக்கம் போல் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் காலை 11 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. மீண்டும் இந்த 2 விமானங்களும் 5 நிமிட இடைவெளியில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்