அரியலூர் மாவட்டத்தில் பலத்த மழை

அரியலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

Update: 2023-02-02 17:58 GMT

பலத்த மழை

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் மட்டக்களப்பு-திரிகோணமலைக்கு இடையே நேற்று அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்தது. இதனால் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே லேசான மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், வேலைக்கு சென்றவர்களுக்கு சிரமத்துக்கு ஆளாகினர்.

மதிய நேரத்தில் விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. மாலை நேரத்தில் மழை தூறிக்கொண்டிருந்தது. இதனால் சாலையில் மழைநீா் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உடையார்பாளையம் பகுதியில் நேற்று கலை முதல் இரவு 9 மணி வரை மழை பெய்தது. இந்த மழை உடையார்பாளையம், கழுமங்கலம், முனைத்தரியன்பட்டி, கச்சிப்பெருமாள், துளாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், காடு வட்டாங்குச்சி, வாணத்தெரியான் பட்டிணம், அழிசுகுடி, பருக்கல், தத்தனூர், வெண்மான் கொண்டான், நாச்சியார்பேட்டை, விளாங்குடி, சுத்தமல்லி, உள்ளிய குடி, இளந்தங்குழி உள்ளிட்ட கிராமங்களில் பெய்தது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்