மதுரையில் ஒரு மணி நேரம் பலத்த மழை
மதுரையில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது;
மதுரையில் நேற்று மாலையில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால், பகல் நேரத்தில் இருந்த வெப்பம் தணிந்தது. நகர் பகுதியை காட்டிலும் புறநகர் பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. இதனால், மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நகர் பகுதியில் பெய்த மழையால் பெரியார், கோரிப்பாளையம், காளவாசல் போன்ற இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபோல், அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது.