1½ மணி நேரம் பலத்த மழை

சங்கராபுரத்தில் 1½ மணி நேரம் பலத்த மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Update: 2022-10-08 18:45 GMT

சங்கராபுரம்

தெற்கு ஆந்திரா பகுதியில் மேல்வளிமண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெப்பம் நிலவியது. பின்னர் மாலையில் வாகனத்தில் கரு மேகங்கள் திரண்டு மழைபெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அடுத்த சில நிமிடங்கள் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல தேங்கியது. மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணிவரை சுமார் 1½ மணி நேரம் பெய்த மழையால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்