திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-11-24 12:52 GMT

பரவலாக மழை

தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுத்திருந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, புழல், ஆவடி, ஈக்காடு, பூண்டி ஆகிய பகுதிகளில் காலை முதல் பலத்த மழை விட்டு விட்டு பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 34 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாகன ஓட்டிகள் அவதி

திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கே.ஜி.கண்டிகை, நல்லாட்டூர், கனகம்மாசத்திரம், மத்தூர், திருவாலங்காடு, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது. மாலை நேரத்தில் திருத்தணி நகரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் கழிவுநீருடன் மழைநீர் வெள்ளம்பெருக்கெடுத்து ஒடியது. பலத்த மழையால் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். பல தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீட்டிற்கு நடந்து செல்லவும் சிரமப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்