கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு நின்றன. மதியம் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது. மேலும் இடை விடாமல் பெய்த மழையால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தப்படி சென்றன. இந்த மழையால் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.