காரைக்குடி பகுதியில் பலத்த மழை

கோடை வெயிலுக்கு இதமாக காரைக்குடி பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2023-05-26 18:45 GMT

காரைக்குடி

கோடை வெயிலுக்கு இதமாக காரைக்குடி பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோடை வெயில்

ஆண்டுதோறும் மே மாதம் கோடைக்காலமாக இருந்து வருகிறது. இதில் அக்னி நட்சத்திர காலம் வெப்பம் மிகுந்த நாட்களாக இருக்கும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் அதிகமாக இருப்பதால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கோடை வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் பெரியவர்கள் முதல் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பலத்த மழை

இந்நிலையில் நேற்று காலையும் காரைக்குடி பகுதியில் வெயில் அதிகமாக இருந்தது. அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டாக காணப்பட்டது. பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் மழை காரணமாக மரங்கள் சாய்ந்தது. பலத்த மழை காரணமாக சாலைகள், தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இரவு முழுவதும் குளுமையான நிலை இருந்ததால் காரைக்குடி பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்