பரவலாக பலத்த மழை

பரவலாக பலத்த மழை பெய்தது.

Update: 2022-10-19 18:45 GMT

தமிழக கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை வெயில் சுட்டெரித்த வேளையில் திடீரென்று பிற்பகலில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவை விட அதிகமாக பெய்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக விவசாயிகள் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாய பணிகளை நம்பிக்கையுடன் தொடங்கி உள்ளனர்.

இந்த மழை காரணமாக மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. முக்கிய தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். போலீசார் தாழ்வான பகுதிகளை பொதுமக்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல உதவினர். சாலைகளில் தேங்கிய அதிகளவிலான மழைநீரை உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தினர் மோட்டார் மூலம் உறிஞ்சி அகற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்