தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் தற்போது கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வைதத்து வரக்கூடிய நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.