பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் - திருமாவளவன் டுவீட்
தனக்கு தொலைபேசி வழியாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வி.கே.சசிகலா மற்றும் பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், திருமாவளவனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் "பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!" என்று தனது டுவிட்டரில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.