புதுக்கோட்டை நகர போக்குவரத்து போலீசாருக்கு இதய பரிசோதனை முகாம்
புதுக்கோட்டை நகர போக்குவரத்து போலீசாருக்கு இதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகர போக்குவரத்து போலீசாருக்கு இலவச இதய பரிசோதனை முகாம் புதுக்கோட்டை ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மரிய சாத்தோ திலகராஜ் வரவேற்றார். முகாமில் டாக்டர் விஜய் சேகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு, இ.சி.ஜி., இதய ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். பின்னர் 25 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.