சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் அருகே சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-10 17:16 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆயூஸ் பல்நோக்கு பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். 108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்க மாநில செயலாளர் மகேஷ், மாநில பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சம்பளத்துடன் கூடிய வாரவிடுமுறை வழங்க வேண்டும். மாதந்தோறும் 1-ந் தேதி சம்பளம் வழங்க வேண்டும். வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்