சுகாதார பணியாளர் தற்கொலை
தேனி அல்லிநகரத்தில் சுகாதார பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அல்லிநகரம் அவ்வையார் தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் கார்த்திகேயன் (வயது 33). இவர் தேனி மாவட்ட கோர்ட்டில் சுகாதார பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அபிராமி (30). கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அபிராமி கோபித்துக் கொண்டு மதுரை ஆணையூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தனது மனைவிக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து அபிராமி கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.