சுகாதார உறுதிமொழி ஏற்பு
கயத்தாறில் சுகாதார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தத.
கயத்தாறு:
கயத்தாறில் பேரூராட்சி பகுதியான தெற்கு சுப்பிரமணிய புரத்தில் ஒருங்கிணைந்த முழு தூய்மை பணி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார். தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப் பாண்டியன், பேரூராட்சி துணை தலைவர் சபுராசலீமா, சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் சுகாதாரம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.