கடலூர் சிறையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்: சவுக்கு சங்கருக்கு உடல்நலம் பாதிப்பு
கடலூர்:
சமூக வலைதளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டார். பின்னர் நிர்வாக காரணங்கள் மற்றும் அச்சுறுத்தலால் கடந்த 16-ந் தேதி கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு கடலூர் மத்திய சிறை நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் சவுக்கு சங்கருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறைசாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.