சுகாதார பேரவை கூட்டம்
நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் வட்டார சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மா.முத்துலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுமதி, யூனியன் ஆணையாளர் சங்கரகுமார் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் யூனியன் அலுவலர்கள், சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர். சுகாதார மேற்பார்வையாளர் நம்பிராஜன் நன்றி கூறினார்.