சுகாதார பரிசோதனை முகாம்
இ.எஸ். செவிலியர் கல்லூரி சார்பில் சுகாதார பரிசோதனை முகாம் நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் இ.எஸ். செவிலியர் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதார பரிசோதனை முகாமை விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நடத்தியது. முகாமில் ரோட்டரி சங்க தலைவர் நம்மாழ்வார் கலந்துகொண்டு அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் சுகாதாரம் சென்றடைய வேண்டும் என்றும், உடல்நலனை பேணிக்காப்பதன் முக்கியத்துவத்தை பற்றியும் உரையாற்றினார்.
மேலும் இம்முகாமில், மாணவர்கள், பொதுமக்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, உயரம், உடல் எடை விகிதத்தை கணக்கிட்டு அவர்களின் உடல்நலன் சீராக செயல்பட கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு கையேடும் வழங்கப்பட்டது. இதில் 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.